​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறை வாகனத்தின் டயர் வெடித்து விபத்து - பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது

Published : Nov 09, 2019 1:09 PM

காவல்துறை வாகனத்தின் டயர் வெடித்து விபத்து - பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது

Nov 09, 2019 1:09 PM

நெல்லை அருகே பாதுகாப்புப் பணிக்காக சென்ற காவல்துறையினரின் வாகனம் டயர் வெடித்து தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானதில், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணொருவர் பலியானார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி பாதுகாப்புப் பணிக்காக நெல்லையிலிருந்து புளியங்குடி நோக்கி  சென்று கொண்டிருந்த காவலர்கள் வாகனம், கடையநல்லூர் அடுத்த சொக்கம்பட்டி அருகே சென்ற போது, திடீரென முன்பக்க டயர் வெடித்து தறிகெட்டு ஓடி அங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

 இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் பலியானார். காவலர் ஒருவர் உட்பட 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சொக்கம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம், தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.