​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..

Published : Nov 09, 2019 12:00 PM

திருப்தி இல்லை.. தீர்ப்பை மதிக்கிறோம்..

Nov 09, 2019 12:00 PM


அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றாலும் தீர்ப்பை மதிப்பதாக சன்னி வஃக்பு வாரியம் கூறியுள்ளது. 

வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யாப் ஜிலானி, தீர்ப்பு தொடர்பாக அதிருப்தி தெரிவித்தார்.

இருப்பினும் தீர்ப்பை மதிப்பதாக கூறிய அவர், மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பானது யாருக்கும் வெற்றியும் அல்ல, தோல்வியும் அல்ல எனத் தெரிவித்த ஜிலானி, அமைதி காக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்த தீர்ப்பையும் விமர்சிக்கவில்லை என்று கூறிய ஜிலானி, மதச்சார்பற்ற கட்டமைப்பை பேணிக் காக்க இந்த தீர்ப்பு பெரிதும் உதவும் என்றார். தங்களுக்கு வழங்கப்படும் 5 ஏக்கர் நிலம் தங்களை பொறுத்தவரை மதிப்பற்றது எனவும் ஜிலானி அதிருப்தி தெரிவித்தார்.