​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார்

Published : Nov 09, 2019 6:42 AM

அண்ணா பல்கலைக்கழகத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார்

Nov 09, 2019 6:42 AM

சென்னை அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மின்னணுவியல் பொறியியல் பிரிவின் 5-ம் பருவத்தேர்வில் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ற மாணவர்களின் விருப்பப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த பருவத்தேர்வு 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட வேண்டும். ஆனால், வினாத்தாளில் 43 மதிப்பெண்கள் வரையான வினாக்கள் 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.