​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Published : Nov 08, 2019 7:21 PM

தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Nov 08, 2019 7:21 PM

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா, தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கம், பொருளாளரும் நடிகருமான கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

இதை அவசர வழக்காக நீதிபதி கல்யாணசுந்தரம் எடுத்து விசாரித்தார். அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில், தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது சட்ட விரோதம் என்று வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை அல்லது ஓராண்டு வரை தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்கவோ அல்லது தற்போதைய நிலை தொடரவோ உத்தரவிட வேண்டுமென நடிகர் சங்கம் மற்றும் கார்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுத்து விட்டார்.