​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியாவின் வட பகுதியில் ரஷியா, துருக்கி ராணுவ வாகனங்கள் மீது கற்கள் வீச்சு

Published : Nov 08, 2019 6:30 PM

சிரியாவின் வட பகுதியில் ரஷியா, துருக்கி ராணுவ வாகனங்கள் மீது கற்கள் வீச்சு

Nov 08, 2019 6:30 PM

சிரியாவின் வடக்கு பகுதியில் ரோந்து சென்ற ரஷியா, துருக்கி ராணுவ வாகனங்கள் மீது பொதுமக்கள் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

வட பகுதியிலுள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவமும், சிரியா கிளர்ச்சி படையும் ஒரு மாதத்துக்கு முன்பு தாக்குதலை தொடங்கியது . இந்த தாக்குதலை நிபந்தனையின்பேரில், துருக்கி பின்னர் நிறுத்தியது.

அப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, சிரியாவின் வட பகுதியில் துருக்கி, ரஷியா ராணுவ வீரர்கள் கூட்டாக செவ்வாய்க்கிழமை முதல் 2ஆவது கட்ட ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். மாபாடா (Maabadah) பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களின் வாகனங்கள் இன்று ரோந்து வந்தபோது, அப்பகுதி மக்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து வாகனங்களை ராணுவ வீரர்கள் வேகமாக ஓட்டிச் சென்றனர்.

இருநாட்டு ராணுவ வீரர்களும், கவச வாகனங்களில் ரோந்து வந்ததால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.