​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளுவருக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கட்டியுள்ள கிராமத்தினர்

Published : Nov 08, 2019 1:41 PM



திருவள்ளுவருக்கு 90 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கட்டியுள்ள கிராமத்தினர்

Nov 08, 2019 1:41 PM

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 90 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு கோவில் கட்டி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

புதுப்பட்டி கிராமத்திலுள்ள இந்தக் கோவில் கடந்த 1929ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குறிப்பிட்ட சமுதாயத்தினரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மற்ற கோவில்களைப் போன்றே குடமுழுக்கு விழாக்கள் நடத்தி, பூஜைகள் செய்து சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.