​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றைக் கடந்து நடந்து செல்லும் மக்கள்

Published : Nov 08, 2019 1:29 PM



கிருஷ்ணகிரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றைக் கடந்து நடந்து செல்லும் மக்கள்

Nov 08, 2019 1:29 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிக்கும் வியாபாரத்துக்கும் ஆற்றைக் கடந்து நடந்து செல்லும் மக்கள், பாலம் கட்டித்தர வேண்டுகோள் விடுக்கின்றனர்.

200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒட்டம்பட்டி கிராமத்தில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். ஆற்றைக் கடந்து செல்வதற்குள் மறுகரைக்கு வரும் பேருந்தை தவற விடுவதால் பள்ளி, கல்லூரி செல்வது தாமதமாவதாகவும் ஆற்றில் நீர் அதிகமாக வரும்போது விடுமுறை எடுக்க வேண்டிய நிலையும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் இங்கிருந்து விளைபொருட்களையும் ஆற்றைக் கடந்து எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் கிராம மக்கள் உள்ளனர். எனவே உடனடியாக பாலம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.