​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது - ரஜினி

Published : Nov 08, 2019 12:36 PM

தமிழகத்தில் சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது - ரஜினி

Nov 08, 2019 12:36 PM

தமிழகத்தில் ஆளுமை மிக்க, சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக ரஜினிகாந்த் கூறிய நிலையில், அது சமூகவலைத் தளங்களில் உடனடியாக பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமக்கு சிலர் காவி சாயம் பூச நினைத்தாலும் அது எடுபடாது என்றார்.

அதேசமயம், இன்றைய அரசியலில் இது சகஜம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமது நிலைப்பாட்டை மட்டுமல்ல எப்போதுமே வெளிப்படையாகத் தெரிவிப்பதுதான் தமது வழக்கம் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

திருவள்ளுவருக்கு காவி உடை விவகாரத்தை ஊடகங்களே பெரிதாக்கிவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறினார். 

எம்ஜிஆர் கட்சி தொடங்கி முதலமைச்சர் ஆகும் வரை நடித்தார் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆளுமை மிக்க, சரியான தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அதிமுகவை பொறுத்தவரை தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தங்க நாணயங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். பின்னர் பேசிய தங்கமணி, தங்கள் கட்சிக்கு இரண்டு தலைவர்கள் இருப்பதாக கூறினார்.