​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரிட்டனில் 1952ம் ஆண்டு முதல் சைக்கிளில் பயணித்து முதியவர் சாதனை

Published : Nov 08, 2019 12:22 PM

பிரிட்டனில் 1952ம் ஆண்டு முதல் சைக்கிளில் பயணித்து முதியவர் சாதனை

Nov 08, 2019 12:22 PM

பிரிட்டனை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், சுமார் 10 லட்சம் மைல் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டி வாழ்நாள் சாதனை படைத்ததாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசு ஊழியராக இருந்து ஓய்வுபெற்ற ரஸ் மான்டில் என்பவர், தான் சைக்கிள் வாங்கிய 1952ம் ஆண்டு முதல் சைக்கிளில் முக்கிய பணி இடங்களுக்கு சென்று வருகிறார்.

ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மலைகளில் சைக்கிளில் பயணித்தது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் பயண நேரத்தையும் அவர் டயரி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் வீடு அமைந்துள்ள Aldershot பகுதியிலிருந்து லண்டன் அருகேவுள்ள கபே ஷாப்பில் 8 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்த அவர், 16 லட்சம் கிலோ மீட்டர் அதாவது 10 லட்சம் மைல் தூரத்தை கடந்ததாக தெரிவித்துள்ளார்.அவரை பாராட்டி சான்றும் வழங்கப்பட்டுள்ளது