​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தை சீனிவாசனின் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் கமல்

Published : Nov 07, 2019 3:24 PM



தந்தை சீனிவாசனின் திருவுருவச்சிலையை திறந்து வைத்தார் கமல்

Nov 07, 2019 3:24 PM

அரசியலில் இருந்தாலும் தனது கலைப்பயணம் தொடரும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் தனது 65வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், நடிகர் பிரபு, சுஹாசினி, ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன், ரசிகர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்