​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 18,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

Published : Nov 07, 2019 1:56 PM



பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 18,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

Nov 07, 2019 1:56 PM

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இழப்பை சந்தித்து வரும் நிலையில் விருப்ப ஓய்வு பெற விருப்பம் உள்ளவர்களுக்காக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். பணியில் இருந்த வருடங்களைக் கணக்கிட்டு  ஆண்டுக்கு 35 நாட்களுக்கான ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் , ஓய்வு பெறும் வயதுவரை  25 நாட்களுக்கான சம்பளம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் விருப்ப ஓய்வு பெற  டிசம்பர் 4 ஆம் தேதி வரை ஒருமாதம் காலம் வாய்ப்பளிக்கப்படும். இதன் கீழ் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.