​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப்2, குரூப்2ஏ தேர்வுகளில் கொண்டுவந்த மாற்றத்தை கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published : Nov 06, 2019 3:22 PM

குரூப்2, குரூப்2ஏ தேர்வுகளில் கொண்டுவந்த மாற்றத்தை கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Nov 06, 2019 3:22 PM

டிஎன்பிஎஸ்சியின் குரூப்2, குரூப்2ஏ பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் பட்டதாரி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டுவந்த மாற்றாங்களை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதையடுத்து, முதன்மை தேர்வில் மொழிப்பெயர்ப்பு தேர்ச்சி கட்டாயம் என்றும் ஆனால் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இதனால் தமிழ்வழி பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று அச்சத் தெரிவித்துள்ள இளைஞர்கள், பழைய தேர்வு முறை மற்றும் பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.