​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்சியர் அலுவலக ஊழியர் மீது ஆட்சியரிடமே புகாரளித்த முதியவர்

Published : Nov 05, 2019 4:01 PM

ஆட்சியர் அலுவலக ஊழியர் மீது ஆட்சியரிடமே புகாரளித்த முதியவர்

Nov 05, 2019 4:01 PM

ராமநாதபுரத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அலைக்கழிப்பதாக ஆட்சியர் அலுவலக உதவியாளர் மீது நேரடியாக ஆட்சியரிடமே முதியவர் ஒருவர் புகாரளித்த நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாய்ந்துள்ளது.

மாடக்கொட்டான் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தங்கராஜ் என்பவர், முதியோர் ஓய்வூதியம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்த்துறை பிரிவில் உதவியாளராகப் பணிபுரியும் மாரி என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு 2 ஆண்டுகளாக அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் நொந்துபோன தங்கராஜ், திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாரி மீது நேரடியாக ஆட்சியரிடமே புகாரளித்தார். மாரியை அழைத்து கண்டித்த மாவட்ட ஆட்சியர் அங்கேயே ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி முதியவரிடம் அளித்தார்.

தொடர்ந்து மாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.