​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரெஹ்மான் எச்சரிக்கை

Published : Nov 05, 2019 3:28 PM

இம்ரான் கான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரெஹ்மான் எச்சரிக்கை

Nov 05, 2019 3:28 PM

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாமியத் உலேமா இ இஸ்லாம் ஃபாஸில் கட்சி தலைவர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் ஒன்று கூடி இஸ்லாமாபாத்தில்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது இம்ரான்கான் தனது பதவியை இரு நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என JUI-F (ஜாமியத் உலேமா இ இஸ்லாம் ஃபாஸில்) தலைவர் மவுலானா ஃபஜ்லூர் ரெஹ்மான் வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், இஸ்லாமாபாத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பேசிய ரெஹ்மான், இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட கெடு முடிவடைந்து விட்டதாக கூறினார்.

இம்ரான் கான் பதவி விலகாவிடில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறிய அவர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.