​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.வீரமணி

Published : Nov 05, 2019 3:02 PM

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் கே.சி.வீரமணி

Nov 05, 2019 3:02 PM

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல, நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

இதில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாக கூறினார். 2021ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.