​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் பொறியாளரிடம் நூதன மோசடி

Published : Nov 05, 2019 1:00 PM



பெண் பொறியாளரிடம் நூதன மோசடி

Nov 05, 2019 1:00 PM

மும்பையைச் சேர்ந்த பெண் பொறியாளரின் டெபிட் கார்டை, 56 முறைக்கும் மேலாக பயன்படுத்தி, சுமார் மூன்றரை லட்ச ரூபாய் வரையில், வெளிநாட்டைச் சேர்ந்த கும்பல் மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர், மும்பையில் உள்ள கன்ஜூர்மார்க்  காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

மகப்பேறு விடுமுறையில் உள்ள தமக்கு, கடந்த 22ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், தனது கணக்கு உள்ள வங்கியிலிருந்து, தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தபோதுதான் மோசடி நடைபெற்றது தெரியவந்ததாக தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

பொதுவாக வெளிநாட்டு பரிவர்த்தனையின்போது, OTP எண் தேவைப்படாது என்பதை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டிருப்பதாக, சைபர் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, வங்கி வாடிக்கையாளர் வெளிநாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடாதபோது, இவ்வாறு, மோசடியாக திருடப்படும் பணத்தை, அடுத்த 10 நாட்களுக்குள், சேவையளிக்கும் வங்கி, தனது வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.