​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எண்ணெய் கசடுகளால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் நிலை - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம்

Published : Nov 03, 2019 11:25 AM

எண்ணெய் கசடுகளால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் நிலை - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம்

Nov 03, 2019 11:25 AM

பிரேசிலின் வடகிழக்கு கடலில் பரவி இருக்கும் எண்ணெய் கசடுகளால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிரேசிலின் ஒன்பது மாநிலங்களை ஒட்டியுள்ள கடலில் எண்ணெய் கசடுகள் மிதக்கத் தொடங்கின. எங்கிருந்து எண்ணெய் கசிந்தது என்பது குறித்து தற்போது வரை சரியான தகவல் இல்லாத நிலையில் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சரியான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் எண்ணெய் கசடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஊழியர்கள், தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதும், பிரேசில் கடற்கரையில் இருந்து இதுவரை 2 ஆயிரம் டன் கசடுகள் அகற்றப்பட்டுள்ளது.