​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் இல்லத்தை இடம் மாற்ற கட்டுமான வல்லுனர்கள் குழு பரிந்துரை

Published : Nov 03, 2019 8:08 AM

பிரதமர் இல்லத்தை இடம் மாற்ற கட்டுமான வல்லுனர்கள் குழு பரிந்துரை

Nov 03, 2019 8:08 AM

பிரதமர் இல்லத்தை தற்போது உள்ள லோக் கல்யாண் மார்க்கில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை அருகே மாற்ற வேண்டும் என்று அகமதாபாத்தை சேர்ந்த ஹெச்.சி.பி நிறுனத்தின் கட்டுமானத்துறை வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர். புதிய நாடாளுமன்ற வளாகத்தை பழைய நாடாளுமன்றம் வளாகம் அருகிலேயே அமைக்கலாம் என்றும் யோசனையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தை இடித்து விடாமல் அதனை இந்திய ஜனநாயகம் தொடர்பான கண்காட்சி வளாகமாக மாற்றலாம் என்றும் அக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள் மீது எந்த வித மாற்றமும் தேவையில்லை என்றும் இககுழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

ஆயினும் இறுதி முடிவை பிரதமர் அலுவலகம், மக்களவை சபாநாயகர் போன்றோரிடம் மேற்கொள்ளும் விரிவான ஆலோசனைக்குப்பிறகு அறிவிக்கும் என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் பிரசித்தி பெற்ற கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தில், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பாக புதிய கட்டடங்களை கட்டி முடிக்க மத்திய அரசு அவகாசம் அளித்து பத்தாயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளது.