​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆழ்துளை கிணறுகள் மூடவில்லை என புகார் வந்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Published : Nov 02, 2019 8:57 PM

ஆழ்துளை கிணறுகள் மூடவில்லை என புகார் வந்தால் சஸ்பெண்ட் - அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Nov 02, 2019 8:57 PM

விழுப்புரம் மாவட்டத்தில் ஏதேனும் பகுதியில் பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது என புகார் வந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் விழுப்புரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள 7 ஆயிரத்து 51 பயனில்லாத ஆழ்துளை கிணறுகளில் 288 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே தற்போது வரை மூடப்படாமல் இருப்பதாகவும் அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் ஆட்சியர் தெரிவித்தார்.