​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைத்தறி நெசவாளர்களுக்காக பொது சேவை மையக் கட்டடம் திறப்பு

Published : Nov 02, 2019 1:28 PM

கைத்தறி நெசவாளர்களுக்காக பொது சேவை மையக் கட்டடம் திறப்பு

Nov 02, 2019 1:28 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோவில்வழி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் 37 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட பொது சேவை மையக் கட்டடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

தொடர்ந்து 538 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான கைத்தறி நெசவு உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்டடத்தில் புதிய ரக நெசவுப் பயிற்சி மையம், பாகு தயாரிப்பதற்கான வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.