​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணை உயிரோடு எரித்த ராணுவ வீரர்... மகள் சாட்சியால் பரபரப்பு..!

Published : Oct 31, 2019 7:36 PM



பெண்ணை உயிரோடு எரித்த ராணுவ வீரர்... மகள் சாட்சியால் பரபரப்பு..!

Oct 31, 2019 7:36 PM

திருவண்ணாமலையை சேர்ந்த பெண்ணை, பெற்ற மகள் கண்முன்னே, ராணுவ வீரர் உயிரோடு எரித்து கொன்றதாக அதிர்ச்சியளிக்கும் புகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கால் முறிக்கப்பட்ட பெண் தீயில் கருகிய திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் ராணுவ வீரரான இவர் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு குஜராத் மாநிலம் ராம்நகர் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கால்முறிந்த நிலையில் அவதிப்பட்டு வந்த ரேணுகா, சமையல் செய்யும் போது ஸ்டவ் வெடித்து உடலில் தீப்பற்றி உயிருக்கு போராடுவதாக ரேணுகாவின் சகோதரர் தரணிதரனுக்கு தகவல் வந்தது.

தரணிதரன் மற்றும் உறவினர்கள் குஜராத் சென்று பார்த்த போது தீயில் உடல் கருகி ரேணுகா பலியானதாக கூறி பிணகூறாய்வு முடித்து சடலம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த ரேணுகாவின் மூத்த மகள் யோகஸ்ரீ தனது தாயை , தனது தந்தை நாகேந்திரன் கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டதாக கூறி திடுக்கிட வைத்தார்.

சிலவாரங்களுக்கு முன்பு தனது தாயின் கால் மீது பூட்ஸ் காலால் மிதித்து உடைத்ததாகவும், 29 ந்தேதி தன்னையும், தங்கையும் வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று விட்டு, விட்டு தனது தாயின் மீது 2 கேன்களில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்ததாகவும் உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரேணுகாவின் உறவினர்கள் குஜராத் போலீசில் புகார் அளிக்க சென்றனர். குஜராத் காவல்துறையினரோ ரேணுகா, குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டதாகவும், சமையல் செய்யும் போது அஜாக்கிரதையாக இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கணவர் தெரிவித்துள்ளதால் மேல் நடவடிக்கை எடுக்க இயலாது என மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் குடும்பபிரச்சனை என்றால் தமிழ் நாட்டில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி புகாரை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து தரணி தரன் தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் தனது தாய்க்கு நேர்ந்த கொடுமையை தான் நேரில் பார்த்ததாக சிறுமி யோகஸ்ரீ தெரிவித்ததாக கூறப்படுகின்றது

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரேணுகாவின் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சம்பவத்தில் குஜராத் காவல் துறையினர் கைவிரித்து விட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்படும் ராணுவ வீரர் நாகேந்திரனை தமிழக காவல்துறை முறையாக விசாரித்தால் மட்டுமே ரேணுகாவுக்கு நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.