​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளும் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

Published : Oct 31, 2019 5:23 PM

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளும் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

Oct 31, 2019 5:23 PM

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள், சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தனர்.

அப்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, மத்திய நிதியமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.

மேலும் திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறுவதற்காக டெல்லிக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், எனவே அதற்கு அனுமதி வழங்கும் விலங்குகள் நல வாரியத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை கேட்ட நிதியமைச்சர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.