​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குருகர் தேசியப்பூங்காவில் வேட்டையாட முடியாமல் தவித்த வயதான சிறுத்தை

Published : Oct 31, 2019 8:52 AM

குருகர் தேசியப்பூங்காவில் வேட்டையாட முடியாமல் தவித்த வயதான சிறுத்தை

Oct 31, 2019 8:52 AM

தென் ஆப்பிரிக்காவில் வயதான சிறுத்தை ஒன்று பசி தாளாமல் மீன்களை வேட்டையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

குரூகர் தேசியப்பூங்காவில் டைலா மெக்கர்டி என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது வயதான சிறுத்தை உடல்நலக் குறைபாடு காரணமாக வேட்டையாட முடியாமல் தவித்தது. சிறிது தூரம் சென்ற அந்தச் சிறுத்தை, நீர் குறைந்த குட்டை ஒன்றில் சேற்றினூடே சிக்கித் தவித்த மீன்களைக் கண்டது.

ஆர்வமும் அவசரமும் ஒன்று சேர குட்டைக்குள் இறங்கிய சிறுத்தை கொழுத்த கெழுத்தி ஒன்றைப் பிடித்தது. தொடர்ந்து மீனை உண்டு ருசி பார்த்த பார்த்த அந்தச் சிறுத்தை, தனது இருப்பிடத்தை அங்கேயே அமைத்துக் கொண்டது. பின்னர் சாவகாசமாக அவ்வப்போது வந்து மீனைப் பிடித்து பசியாறியது என டைலா குறிப்பிட்டார்.