​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..!

Published : Oct 31, 2019 7:10 AM

மருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..!

Oct 31, 2019 7:10 AM

போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்புவோரை தடுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் டெமகிரடிக் TNGDA, SDPGA, TNMOA, GADA, SDWA ஆகிய சங்கங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அவசரம் மற்றும் காய்ச்சல் சிகிச்சைகளைத் தவிர்த்து பிற சேவைகளை இந்த சங்கங்களின் மருத்துவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊதிய உயர்வு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்குவதாக அறிவித்த டி.என்.ஜி.டி.ஏ. எனப்படும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்துடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

ஆனால், தங்களை அழைத்து அரசு பேசவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. இதை அடுத்து, அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இன்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அந்த மருத்துவர்கள் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என அமைச்சர் எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கையைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுஒருபுறமிருக்க, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புவோரை தடுத்து மீண்டும் போராட்டத்திற்கு இழுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது.  

இதனிடையே மருத்துவர்கள் போராட்டம் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் தான் போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் படிக்கும் ஒரு மாணவரின் கல்விச் செலவுக்கு மக்கள் வரிப்பணத்தில் தலா 1.24 கோடி ரூபாய் பணம் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே மருத்துவர்கள் போராட்டம் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் தான் போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கல்வி பயில ஒரு மாணவர் 67,500 ரூபாய் கட்டணம் செலுத்துவதாகவும், ஆனால் ஒரு மாணவருக்கு அரசு 1.24 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதாகவும் சுட்டிக் காட்டினார். பொது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செலவு செய்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பிடிவாதத்துடன் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்காக தான் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரை, வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு மருத்துவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனியில் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்றைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்களுக்கு பதில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவது உறுதி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 1550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டதாகவும், சுமார் 11 மாவட்டங்களில் ஒருவர் கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை எனவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

அதேவேளையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், கடந்த 27ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் பணிக்கு திரும்பத் தயார் எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஊதிய உயர்வு கோரிக்கையை தாங்கள் வலியுறுத்தியதாகவும், இதில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டதுடன், கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று மருத்துவர்களின் சங்கமான TNGDA தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் பேட்டி அளிப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 366 அரசு மருத்துவர்களில் 68 பேர் மட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக 80 அரசு மருத்துவர்கள் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பணிக்கு திரும்பாவிடில் அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தையடுத்து 12 அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் 100 பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 434 பேரும் பணியில் இருப்பதாக அக்கல்லூரி முதல்வர் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.  

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 41 மருத்துவர்களில் 37 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 4 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.

மேலும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 50 அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 450 மருத்துவர்களில் 200 பேரும் பயிற்சி மருத்துவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 250 அரசு மருத்துவர்களும் ஒரு சில பயிற்சி மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 413 அரசு மருத்துவர்களில் 350 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 213 அரசு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 160 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்பில் உள்ள 188 மருத்துவர்களுக்கு நாளை பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கவுள்ளார்..