​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

Published : May 01, 2018 8:40 PM

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் கைது

May 01, 2018 8:40 PM

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். எருக்கம்பட்டு பகுதியை புருஷோத்தமன் என்பவரும் அவரது தங்கையின் தோழியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

பின்னர், கருவை கலைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர். மாணவியின் நடத்தையில் மாற்றங்களை கண்ட பெற்றோர் மகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த, அவர்கள் குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புருஷோத்தமன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், புருஷோத்தமனை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.