​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜகவுக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டம்..?

Published : Oct 30, 2019 12:22 PM

பாஜகவுக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டம்..?

Oct 30, 2019 12:22 PM

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான இடங்களை இடைத்தேர்தலில் பாஜக கைப்பற்றாவிடில் அக்கட்சிக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னர் சட்டசபை பலம் 222 ஆக அதிகரிக்கும் என்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க.வுக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

ஆனால் தற்போது அக்கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இடைத்தேர்தலில், ஆட்சியை தக்கவைக்க தேவையான 6 இடங்களில் பாஜக வெற்றிபெறாவிடிவில் அக்கட்சிக்கு ஆதரவளிக்க ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நலனை கருதி பா.ஜ.க ஆட்சியை கவிழ விட மாட்டேன் என்று குமாராசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.