​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு - டிஜிபிக்கு பீலா ராஜேஷ் கடிதம்

Published : Oct 29, 2019 4:49 PM

அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு - டிஜிபிக்கு பீலா ராஜேஷ் கடிதம்

Oct 29, 2019 4:49 PM

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக காவல்துறை தலைவருக்கு தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். 

காவல்துறை தலைவருக்கு பீலா ராஜேஷ் எழுதிய கடிதத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்தத்தை திரும்பப்பெற அச்சங்கம் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அதை மீறி, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அச்சங்கத்தை சேர்ந்த 5 பேர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் அச்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாமியானா அமைக்கவும், பணியிலிருந்த மருத்துவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தவும் முயற்சி நடந்தது தனது கவனத்துக்கு வந்துள்ளதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதத்தில் பீலா ராஜேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.