​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

Published : Oct 28, 2019 9:47 PM

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

Oct 28, 2019 9:47 PM

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னையில் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை முன்பாக அரசு மருத்துவர்கள் 5 பேர், 4ஆவது நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், தங்களது உடல் நிலையை கருத்தில்கொண்டு, தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வதை கைவிட்டு, போராட்டத்தை தொடரவேண்டும் என தெரிவித்தார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தை தான் அரசியலாக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.