​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர்

Published : Oct 26, 2019 1:15 PM

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர்

Oct 26, 2019 1:15 PM

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில், தீபாவளியை முன்னிட்டு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினார். மேலும் குறைந்த அளவிலான மருத்துவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், போதுமான அளவு மருத்துவர்கள் பணியில் இருப்பதாகவும் தெரிவித்த அவர்,  மருத்துவர்களுடன் பேச்சுவார்ccத்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.