​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில், மே தின விடுமுறையை கழிக்கும் வகையில் பிரம்மாண்ட மின்விளக்கு காட்சியகம்

Published : May 01, 2018 5:46 PM

சீனாவில், மே தின விடுமுறையை கழிக்கும் வகையில் பிரம்மாண்ட மின்விளக்கு காட்சியகம்

May 01, 2018 5:46 PM

சீனாவில், மே தின விடுமுறையை கழிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரம்மாண்ட மின் வண்ண விளக்கு காட்சியகம், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சீனாவின் Sichuan மாகாணத்தில் உள்ள Qinglong என்ற கிராமத்தில், மே தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, வண்ணவிளக்கு காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், கண்கவர் மின்சார விளக்குகளால் சுரங்கம் போலவும், கடல் போன்ற அமைப்பும் பலரையும் வசீகரிக்கின்றன. இதற்காக, ஒரு கோடியே 80 லட்சம் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.