​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து அதிமுக அரசுக்கு மக்கள் அங்கீகாரம் - அமைச்சர்

Published : Oct 25, 2019 2:03 PM

இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து அதிமுக அரசுக்கு மக்கள் அங்கீகாரம் - அமைச்சர்

Oct 25, 2019 2:03 PM

இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, தமிழக அரசுக்கு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம் அளித்திருப்பதாக வருவாய் மற்றும் தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை சிந்தாமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு 3 குளிர்சாதன பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் பேசிய அவர், ஜெயலலிதா இல்லாததால் அதிமுகவினர் அனாதையாகி விட்டதாக விமர்சித்தோருக்கு, இடைத் தேர்தல் முடிவு பேரிடியாகி விட்டதாக கூறினார்.

2 படங்களில் மட்டுமே நடித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரை விமர்சித்திருப்பதை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, அரசிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கூறினார்.