​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மிகப்பெரிய காபி மொசைக் ஓவியம் உருவாக்கி கின்னஸ் சாதனை

Published : Oct 25, 2019 7:46 AM



மிகப்பெரிய காபி மொசைக் ஓவியம் உருவாக்கி கின்னஸ் சாதனை

Oct 25, 2019 7:46 AM

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெர்சி மைமேலா எனும் ஓவியர், மிகப்பெரிய காபி மொசைக் ஓவியத்தை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

வித்தியாசமான ஓவியங்களை பார்வையாளர்கள் வியக்கும் வண்ணம் உருவாக்குவதில் கில்லியான பெர்சி மைமேலா, வழக்கமாக உப்புகளை தரையில் தூவி, ஓவியங்கள் உருவாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனிடையே மாறுபட்ட முயற்சியில் இறங்கிய அவர், மிக பிரமாண்டமான காபி மொசைக் ஓவியம் ஒன்றை உருவாக்கினார். இந்த ஓவியம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மிகப்பெரிய காபி மொசைக் ஓவியம் எனவும் இது சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெர்சி மைமேலா இடம்பிடித்துள்ளார்.