​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

Published : Oct 24, 2019 10:41 AM

அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பன்னீர்செல்வம்

Oct 24, 2019 10:41 AM

இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மருது சகோதரர்களின் 218ஆவது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வெற்றி பெறும் என தெரிவித்தார்.