​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஞ்சப்புகாரில் கைதான வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தமிழழகனிடம் விசாரணை

Published : Oct 23, 2019 7:01 PM

லஞ்சப்புகாரில் கைதான வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தமிழழகனிடம் விசாரணை

Oct 23, 2019 7:01 PM

லஞ்சப்புகாரில் கைதான சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் தமிழழகன் என்பவர் வழக்கு விசாரணைக்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின் படி பாதிக்கப்பட்ட நபர் ரசாயனம் தடவிய பணத்தை காவல் ஆய்வாளர் தமிழழகனிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் ஆய்வாளர் தமிழழகனை கையும், களவுமாக பிடித்தனர்.

இதனையடுத்து,  கைதான தமிழழகனிடம், டிஎஸ்பி லவக்குமார், பெண் ஆய்வாளர் உமாதேவி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.