​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைநீரை கிணற்றில் சேமித்து...குளங்களை நிரப்பி அசத்தும் மக்கள்..!

Published : Oct 23, 2019 6:38 PM

மழைநீரை கிணற்றில் சேமித்து...குளங்களை நிரப்பி அசத்தும் மக்கள்..!

Oct 23, 2019 6:38 PM

ராமநாதபுரம் அருகே வறட்சியின் போது தண்ணீருக்கு தவித்த மக்கள், தற்போது பெய்துவரும் மழை நீரை கால்வாய் மூலம் பாசன குளங்களிலும், கோவில் குளங்களிலும் நிரப்பியுள்ளனர்.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், குடிநீர் பிரச்சனையை தாங்களே தீர்த்து கிராம மக்கள் அசத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதி, திறந்தவெளி வயல்கள், சாலையோர ஓடைகள், என ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. 

அங்கிருந்து ராட்சத மோட்டார் மூலம் நீரை இறைத்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிள்ளையார் குளம் ஆகியவற்றை நிரப்பியுள்ளனர். மேலும் நீரின்றி கிடந்த 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் தெப்ப குளத்திலும் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினையை சமாளித்து வருவதாக கிராம மக்கள் பெருமை பொங்க தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் இன்றி கஷ்டப்பட்ட மக்கள், தற்போது அதன் அருமையை உணர்ந்து மழை நீரை சேமித்து, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து பாராட்டுப்பெற்றுள்ளனர்.