​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

Published : Oct 23, 2019 6:34 PM

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

Oct 23, 2019 6:34 PM

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இயந்திர உற்பத்திப் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

அதில் தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017 - 18ம் ஆண்டு முதல் 2019 -20ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 29 கோடியே 22 லட்ச ரூபாய் செயலாக்க மானியத்தை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே போல் 14வது மத்திய நிதி ஆணையத்தின் 2019 -20ம் ஆண்டிற்கான 4 ஆயிரத்து 345 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகையினையும் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஊராட்சிகளில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை அமைச்சர் வேலுமணியிடம் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார்.