​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

Published : Oct 23, 2019 5:30 PM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

Oct 23, 2019 5:30 PM

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீபாவளி தீக்காய சிறப்புப் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளியின்போது பட்டாசினால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கை வசதிகளுடன் சிறப்பு பிரிவு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என்றார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி பண்டிகை அன்று 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.