​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமரி தங்க புதையல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசாருக்கு சம்மன்

Published : Oct 23, 2019 4:50 PM

குமரி தங்க புதையல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசாருக்கு சம்மன்

Oct 23, 2019 4:50 PM

தங்க புதையலை பறிக்க ஓட்டுநரை கடத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் வருகிற நவம்பர் மாதம் 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜெர்லின் என்ற பொக்லைன் ஓட்டுநருக்கு தங்க புதையல் கிடைத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, ஜெகன் என்பவர் உட்பட 7 பேர் கும்பல், ஜெர்லினை கடத்தி சென்று புதையல் குறித்த விவரங்களை கேட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய கருங்கல் காவல்நிலைய பெண் ஆய்வாளர் பொன்தேவி, உதவி ஆய்வாளர் ரூபன், ஏட்டு ஜஸ்டின் ஜோன்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், நவம்பர் 15 ம் தேதி திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் நடைப்பெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி 3 பேருக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.