​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள்

Published : Oct 23, 2019 4:23 PM

தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு பேருந்துகள்

Oct 23, 2019 4:23 PM

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல கூடுதலாக 310 பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட இருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கோ. கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு வரும் 24ந் தேதி முதல் 26ம் தேதி வரை வெளியூர் செல்லும் பேருந்துகள், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த 5 பேருந்து நிலையங்களுக்கும் ஏற்கெனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும், எனினும் 24ந் தேதி முதல் 26ம் தேதி வரை கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.