​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

Published : Oct 23, 2019 3:40 PM

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

Oct 23, 2019 3:40 PM

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதனால் ஜவுளிக்கடைகள், இனிப்புக்கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். துணிக்கடைகள், நகைக்கடைகள், இனிப்புக் கடைகளிலும் தீபாவளி வியாபாரம் சூடுபிடித்துள்ளது. 

மதுரை:

மதுரை விளக்கு தூண், மேலமாசி வீதி, கீழ மாசி வீதி, கீழ மாரட் வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் தீபாவளி பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. பெரிய பெரிய கடைகளிலும் சாலையோரம் போடப்பட்டுள்ள தரைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரையில் உள்ள அண்ணா நகர், கே.கே.நகர், அனுப்பானடி, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் புறநகர்களான தபால்தந்தி நகர், அவனியாபுரம், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாய் வந்து ஆடை அணிகலன்கள் வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோன்று திருப்புவனம், சத்திரப்பட்டி, உமச்சிகுளம், அழகர் கோவில் போன்ற சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்களும் தீபாவளி பொருட்கள் வாங்க மதுரைக்கு படையெடுத்து உள்ளனர்.