​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published : Oct 23, 2019 3:40 PM



ராமதாஸின் பொய்யை நம்பி டாக்டர் சீனிவாசன் மனு - ஸ்டாலின் குற்றச்சாட்டு

Oct 23, 2019 3:40 PM

பாமக நிறுவனர் ராமதாஸின் பொய்யை நம்பி, முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மனு அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது அறைகூவலுக்கு பதிலளிக்காமல் ராமதாஸ் வாய் மூடி மவுனமானதாகவும், இந்நிலையில் ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில் சீனிவாசன் மனு தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராமதாஸின் கூற்றை நம்பி, சீனிவாசன் அவருடைய நேரத்தை வீணடித்திருப்பதாகவும், இதற்குப் பதிலாக, அ.தி.மு.க. முன்னாள் தலைவி ஜெயலலிதாவால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஏதாவது பலனாவது கிடைக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

முரசொலி இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்க, ராமதாஸ் முன் வருவாரா? அவரை சீனிவாசன் வலியுறுத்த முன்வருவாரா? என்றும் அறிக்கையில் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.