​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு

Published : Oct 23, 2019 3:36 PM



கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு

Oct 23, 2019 3:36 PM

பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிரேய்ஸ் (Grays) பகுதியில் உள்ள வாட்டர்கிளேட் இன்டஸ்ட்ரீயல் பூங்காவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி குறித்து எஸெக்ஸ் போலீஸுக்கு நள்ளிரவில்  தகவல் வந்தது.

இதன்பேரில் அங்கு சென்று கண்டெய்னர் லாரியில் சோதனை நடத்தினர். அப்போது லாரியின் கண்டெய்னரில் 39 சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த லாரி, பல்கேரியாவில் இருந்து வந்த லாரி என்பதும், ஹோலிஹெட் பகுதி வழியாக கடந்த 19ம் தேதி பிரிட்டனுக்குள் நுழைந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் எஸெக்ஸ் போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

39 உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உள்துறை அமைச்சர் பிரித்தி   படேல் ஆகியோர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.