​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிளிம்பிங் எனப்படும் சுவர் ஏறுதல் போட்டியில் இளம்பெண் உலக சாதனை

Published : Oct 23, 2019 6:57 AM

கிளிம்பிங் எனப்படும் சுவர் ஏறுதல் போட்டியில் இளம்பெண் உலக சாதனை

Oct 23, 2019 6:57 AM

இந்தோனேஷியாவில் நடைபெற்ற கிளிம்பிங் எனப்படும் சுவர் ஏறுதல் போட்டியில் இளம்பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ஐஎஸ்எஸ்சி உலகக் கோப்பைக்கான கிளிம்பிங் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் ஏரிஸ் ஷுசாந்தி ராஹாயுவும், சீனாவின் சாங் இல்லிங்கும் களமிறங்கினர். 15 மீட்டர் உயரம் கொண்ட சுவற்றில் ஏறுவதற்கு இருவரும் ஆயத்தமாகினர்.

குறிப்பிட்ட நேரத்தில் விசில் ஒலித்ததும் மின்னல் வேகத்தில் ஏறினர். ஒரு நொடியில் இல்லிங் வாய்ப்பைத் தவறவிட்டதால் ஏரிஸ் குறிப்பிட்ட எல்லையை அடைந்தார்.

இந்தப் போட்டியில் ஏரிஸ் 6 புள்ளி 995 விநாடிகளில் ஏறி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக ஏரிசுடன் போட்டியிட்ட இல்லிங் 7 புள்ளி 101 விநாடிகளில் ஏறிய உலக சாதனையை ஏரிஸ் முறியடித்தார்.