​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை வழக்கில் இருவர் கைது

Published : Oct 23, 2019 6:41 AM

இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை வழக்கில் இருவர் கைது

Oct 23, 2019 6:41 AM

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து மகா சபை பிரமுகர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 2 பேரை குஜராத்தில் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 19ம் தேதி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து முக்கியக் குற்றவாளிகளாக கருதப்படும் அஷ்பாக் ஷேக், மொயினுதீன் பத்தான் ஆகிய இந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதம் தொடர்பாக கமலேஷ் திவாரி கூறிய சர்ச்சைக்குரிய சில கருத்துகளால் பழிவாங்கும் உணர்ச்சியோடு இந்த படுகொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச போலீசார் தலைமறைவாக இருந்த இரண்டு பேரையும் தேடி சூரத்திற்கு வந்தபோது, குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஸ்வீட் பெட்டிக்குள் கத்தியை மறைத்து வந்து கொலை செய்தனர். அந்த ஸ்வீட் கடையில் நடைபெற்ற விசாரணை இந்த இருவரின் இருப்பிடம் சூரத் என்பதை போலீசாருக்கு தெரியப்படுத்தியது.