​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published : Oct 23, 2019 6:25 AM

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Oct 23, 2019 6:25 AM

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

மதுரை மாவட்ட கலால் வரி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் மாரிமுத்து என்பவர் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அதனை தொடர்ந்து கருப்பாயூரணி அருகே உள்ள சீமான்நகர் பகுதியில் உள்ள மதுக்கடையில் லஞ்ச பணத்தை பெற வந்த மாரிமுத்துவை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆறு பேர் கொண்ட குழுவாக சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் உட்பட 82 ஆயிரத்து 775 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தீபாவளியை முன்னிட்டு அதிக அளவில் பட்டாசு மற்றும் பணம் லஞ்சம் வாங்குவதாக வந்த லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாசியர் அலுவலகத்தில் தடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வட்டாட்சியர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 130 பட்டாசு பார்சல் மற்றும் அவரது அலுவலக அறையில் கணக்கில் காட்டப்படாத பணம் 29 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இறுதியில் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் வானதி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.