​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்

Published : Oct 22, 2019 8:50 PM

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்

Oct 22, 2019 8:50 PM

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்கியதில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

அங்குள்ள நவுசாரா பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு 500 மீட்டர் தொலைவில், ராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்கியதில் இளநிலை அதிகாரி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு விரைந்த கூடுதல் படையினர்,அந்த இடத்தை முற்றுகையிட்டனர். அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று, பயங்கரவாதிகளின் நான்கு முகாம்களை இந்திய ராணுவம் அழித்த து. இதனால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.