​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்-பொன் ராதாகிருஷ்ணன்

Published : Oct 22, 2019 1:23 PM

ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்-பொன் ராதாகிருஷ்ணன்

Oct 22, 2019 1:23 PM

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்று தாம் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள திருமயம் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதனை அவரது இல்லத்துக்கு நேரில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பதாகவும், அதே நேரத்தில் பாஜகவில் அவர் சேர வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.

பாஜகவில் ரஜினிகாந்தை சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, இல்லை என்றார்.