​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமித் ஷாவின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

Published : Oct 22, 2019 11:15 AM

அமித் ஷாவின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

Oct 22, 2019 11:15 AM

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 55ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1964ஆம் ஆண்டு இதேநாளில் பிறந்த அமித் ஷா, தனது 55ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ல பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சரவையில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் அமித் ஷாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

சிறந்த நிர்வாகி மற்றும் கடின உழைப்பாளி என்று அமித் ஷாவை அவர் பாராட்டியுள்ளார். நாட்டை வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதில் மதிப்புமிக்க பங்காற்றி மத்திய அரசில் அமித் ஷா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சரவையில் தன்னுடன் இணைந்து பணியாற்றும் அமித் ஷாவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

சிறந்த நிர்வாகி மற்றும் கடின உழைப்பாளி என்று அமித் ஷாவை அவர் பாராட்டியுள்ளார். நாட்டை வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதில் மதிப்புமிக்க பங்காற்றி, மத்திய அரசில் அமித் ஷா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்துடன் நீடூழி வாழ வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.