​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிவில் நீதிபதி தேர்வு விண்ணப்ப விவகாரம் - 2016 செப்., 9 க்கு முன் பட்டம் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்

Published : Oct 21, 2019 8:51 PM

சிவில் நீதிபதி தேர்வு விண்ணப்ப விவகாரம் - 2016 செப்., 9 க்கு முன் பட்டம் பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்

Oct 21, 2019 8:51 PM

2016ஆம் ஆண்டு படிப்பை முடித்து, செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்டப் பட்டம் பெற்றவர்களும் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு சட்ட பட்டத்தை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பத்மாவதி, லட்சுமி சண்முக பிரியா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, 2016ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம்  தேதிக்கு முன்பு சான்றிதழ் பெற்றவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அனுமதி அளித்தது.

வரும் 25ஆம் தேதி இரவு 11.59 வரை ஆன்லைன் விண்ணப்பத்திற்கான வசதியை விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பானையில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை தளர்த்தமுடியாது எனவும் உத்தரவிரப்பட்டது.

இந்த உத்தரவு குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உயர்நீதிமன்ற இணையதளங்களில்    வெளியிடுமாறு அறிவுறுத்திய நீதிமன்றம், விசாரணை தள்ளிவைத்தது.