​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

Published : Oct 21, 2019 8:31 PM

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மருத்துவர்களின் போராட்ட அறிவிப்பு வேதனையளிக்கிறது

Oct 21, 2019 8:31 PM

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில், அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக அமோக வெற்றி பெறும் என கூறினார். 

அதுமட்டுமல்லாது, வருகிற 25ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.